செய்திகள்

ஆறு இட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதியான பாலைமரத்திராந்திகள் கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்பு

கிளிநொச்சி முட்கொம்பன் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்ட சுமார் ஆறு இட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட  பெறுமதியான பாலைமரத்திராந்திகள் கிளிநொச்சிப் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி முட்கொம்பன் அக்கராயன்குளம் புதுமுறிப்பு ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப்பகுதிகளில் மிகவும் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை மரங்கள் சட்டவிரோதமான முறையில் வெட்டப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.

கிளிநொச்சிப் பொலிசாருக்கு கிடைத்த தகவல்களையடுத்து இன்று  அதிகாலை கிளிநொச்சிப் பொலிசார் முட்கொம்பன் காட்டுப்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது சுமார் ஆறு இலட்சம் ரூபாவிற்கும் மேற்பட்ட பெறுமதிடைய பாலைமரத் தீராந்திகள் வெளியிடங்களிற்கு கடத்த இருந்த நிலையில் மீட்கப்பட்டன என்றும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், இதனுடன் தொடர்புபட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கிளிநொச்சிப் பொலிசார் தெரிவித்துள்ளார்.

n10
SAMSUNG CAMERA PICTURES SAMSUNG CAMERA PICTURES