செய்திகள்

ஆவாவுக்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை : வடக்கு ஆளுனர்

ஆவா குழுவுக்கும் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது என வடக்கு ஆளுனர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள அவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனக்கு தெரிந்த தகவல்களின் படி அந்த குழுவுக்கும் இராணுவத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது. வடக்கில் தற்போது அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை காரணமாக இவ்வாறான குழுக்கள் உருவாகியுள்ளன. ஆனால் இதற்கும் இராணுவத்திற்கும் தொடர்பு கிடையாது. என தெரிவித்துள்ளார்.
இதேவேளை இது தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்‌ஷ தொடர்பாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன வெளியிட்டுள்ள கருத்து தொடர்பாகவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். இதன்போது ராஜித சேனாரட்னவுக்கு இது தொடர்பாக தெரியுமாக இருந்தால் அவர் அதனை ஜனாதிபதி , பிரதமரிடம் கூறி நடவடிக்கையெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். -(3)