செய்திகள்
ஆவா குழுவுக்கு ‘புலி’ முத்திரை குத்த சிலர் முயற்சி: பாராளுமன்றத்தில் அமைச்சர் விஜயதாச
ஆவா குழுவிற்கு விடுதலைப் புலிகளின் முத்திரையைக் குத்தி நாட்டை சீர்குலைக்க சிலர் முயற்சிப்பதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆவா குழுவில் கொள்ளையர்கள் சிலர் உள்ளபோதும் அவ்வாறான பாதாளக் குழுக்கள் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளதாக விஜேதாச ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
அவ்வாறானவர்கள் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், ஆவா குழு உறுப்பினர்கள் தொடர்பில் தாம் சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.:06




