ஆவா குழுவை உருவாக்கியது இராணுவ அதிகாரியே: ஆங்கில ஊடகம் பரபரப்புத் தகவல்
ஆவா குழு எனப்படும், உந்துருளிகளில் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவை, முன்னைய ஆட்சிக் காலத்தில் வடக்கில் உயர் பதவியில் இருந்த இராணுவ அதிகாரி ஒருவரே, இரகசியமாக உருவாக்கினார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூத்த காவல்துறை அதிகாரி ஒருவரை ஆதாரம் காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், நன்கு திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட அடிப்படையில் இந்தக் குழு உருவாக்கப்பட்டது.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதையடுத்து, நடத்தப்பட்ட விசாரணைகளிலேயே காவல்துறை இதனைக் கண்டுபிடித்துள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு தொடர்பாக ஊடகங்களிடம் எதையும் கூற வேண்டாம் என்று அரசியல் அதிகாரமட்டத்தில் இருந்து பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.:06




