ஆவா குழு தொடர்பாக மேலும் பல தகவல்களை வெளியிட ராஜித தீர்மானம்
ஆவா குழு தொடர்பான முழு தகவல்களையும் வெளியிடும் வகையில் விசேட அறிவிப்பொன்றை விடுப்பாற்கு அமைச்சர் ராஜித சேனாரட்ன தயாராகி வருகின்றார்.
ஆவா குழுவின் பின்னணியில் கோதாபய ராஜபக்ஷவே இருப்பதாக அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ராஜித சேனாரட்ன தெரிவித்திருந்த நிலையில் அதற்கு கோதாபய மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கோதாபய ராஜபக்ஷ இல்லையென கூறுவது பொய்யெனவும் இது தொடர்பாக முழு தகவல்களையும் வெளியிட தான் தயாராக இருப்பதாகவும் அறிக்கையொன்றை விடுத்து ராஜித சேனாரட்ன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். -(3)




