”ஆவா” பயங்கரவாத குழுவல்ல ; ருவான் விஜேயவர்த்தன
வடக்கில் செயல்படுவதாக கூறப்டும் ஆவா குழு பொதுமக்களை பீதிக்குள்ளாக்கி கொள்ளைகளை மேற்கொள்ளும் குழுவாகும் என்றும் இது பயங்கரவாத குழு அல்ல என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்செயலில் ஈடுபடும் இக்குழுவினரை கைது செய்வதற்காக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்செயலில் ஈடுபடும் இந்த குழுவிற்கு இராணுவத்தினருடனோ அரசியல்வாதிகளுடனோ எல்.ரி.ரி பயங்கரவாதிகளின் தொடர்புகள் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். இக்குழு மோட்டார் சைக்கிளில் செயற்படும் குற்றச்செயல் குழுவாக அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஊடகம் ஒன்றிற்கு அவர் தெரிவித்துள்ளார். -(3)




