ஆஸ்கர் ரேஸில் அனுஷ்காவின் படம்?
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் ராணியாக நடித்து வெளிவந்த ருத்ரமாதேவி என்ற வரலாற்று படத்தை ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இயக்குனர் குணசேகர் இதை தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். “சிறந்த வெளிநாட்டு படம்” என்ற பிரிவில் தான் இது தேர்வாகி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த படத்தில் அனுஷ்கா தவிர, ராணா, அல்லு அர்ஜுன், மற்றும் பலர் நடித்திருந்தனர். ரசிகர்கள் மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை என்றாலும், தெலுங்கு தேச ராஜாக்களின் வாழ்க்கையை இது எடுத்துக்கூறியதால், அரசு பல்வேறு விருதுகளை இந்த படத்திற்கு தந்தது.
N5




