செய்திகள்
இங்கினிமிட்டிய வாவியில் வானொன்று விழுந்து விபத்து: ஒருவரை காணவில்லை
நவகத்தேகம பகுதியில் வானொன்று இங்கினிமிட்டிய வாவியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுடன் அந்த வானில் பயணித்த பெண்னொருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வானில் தாய் , தந்தை மற்றும் மகன் ஆகியோர் பயணித்துள்ளதுடன் தந்தையும் மகனும் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் தாய் காணாமல் போயுள்ளார். பொலிஸாரும் பிரதேசவாசிகளும் அவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.




