செய்திகள்

இடைக்கா வரவு செலவுத் திட்டம் 120 வாக்குகளால் நிறைவேறியது!

2022 ஆம் ஆண்டின் இடைக்கால வரவு செலவுத் திட்டம் 115 மேலதிக வாக்குகளால் நிறைவேறியுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து 120 பேரும், எதிர்த்து 5 பேரும் வாக்களித்திருந்தனர். 43 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட அரசாங்கத்தை ஆதரிக்கும் கட்சிகள் ஆதவாக வாக்களித்தன. ஜே.வி.பி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றின் 5 உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தனர்.

பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, டலஸ் மற்றும் வீரவன்ச அணிகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

-(3)