இணையதளத்தில் சாதனை: ரசிகர்களை கவர்ந்த ரஜினியின் ‘தர்பார்’ டிரெய்லர்
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் அதிகம்பேர் பார்த்த டிரெய்லர் என்ற சாதனையும் நிகழ்த்தி உள்ளது.தலைவா என்ற பின்னணி குரலுடன் தொடங்கும் டிரெய்லரில் மும்பை போலீஸ் கமிஷனர் ஆதித்யா அருணாச்சலம் என்ற பெயரில் ரஜினி மிடுக்கோடு அறிமுகமாகிறார்.
தொடர்ந்து ரவுடிகளை நொறுக்கும் காட்சிகள் வருகின்றன. போலீஸ் ஆபிசரா சார் அவன் கொலைகாரன் என்ற குரல் ஒலிக்கிறது. நயன்தாராவை காதலிக்கிறார். ‘கேம் ஆட்றாங்களா நம்ம கிட்டயேவா’ போலீஸ்கிட்ட லெப்ட்ல வச்சுக்கோ ரைட்ல வச்சுக்கோ ஸ்டெய்ட்டா வைச்சுக்க வேணாம்னு சொல்லு என்று பஞ்ச் பேசுகிறார்.(15)




