செய்திகள்

இதனால் தான் சாய் சக்தி தற்கொலைக்கு முயன்றாரா?

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலை பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தது. அவரைத் தொடர்ந்து மற்றொரு சின்னத்திரை நடிகரான சாய் சக்தி தற்கொலை முயற்சியில் இறங்கியதாக வாட்ஸ் அப்பில் செய்தி வெளியாகி இருந்தது.

இதனால் பலர் அதிர்ச்சியடைந்து சாய் சக்தியை தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளனர். இந்நிலையில் தன் தற்கொலை முயற்சிக்கான காரணத்தை மீண்டும் வாட்ஸ் அப்பில் கூறியுள்ளார்.

அதில் அவர், மனைவி நல்ல மனைவி, குழந்தை இருந்தாலும், வருமானம் இல்லாமல் போனது. எனது மாமனார் வீட்டினர் மனஉளைச்சலை ஏற்படுத்தினர். கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இந்த மனஉளைச்சல்தான் என்னை தற்கொலைக்கு விரட்டியது. இப்போது ஆன்மீகம், பிரேயரில் மனதை திருப்பியிருப்பதாகவும், ஒரு மருத்துவரிடம் மன உளைச்சலுக்கு சிகிச்சை பெறப் போகிறேன்.

எனக்கு நிறைய பேர் போன் செய்து பேசினர். நடிகர் சங்கத்தில் இருந்து போன் செய்தனர். சின்னத்திரை நடிகர், நடிகையர்கள் போன் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி இனி தவறான முடிவு எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் சாய் சக்தி.

N5