இந்தியர்கள் யாருமின்றி நடந்த கச்சத்தீவு திருவிழா
கச்சத்தீவு திருவிழாவில் எந்தவொரு இந்தியரும் கலந்துக்கொண்டிருக்கவில்லை.
தமிழ் நாட்டை சேர்ந்த ஒருவரேனும் இல்லாது இடம்பெற்ற முதலாவது விழாவாக இது அமைந்துள்ளது.
கிட்டத்தட்ட 5000ற்கும் மேற்பட்ட இந்திய மீனவ குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த திருவிழாவில் கலந்துக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட போதும் ஒருவரேனும் அங்கிருந்து கலந்துக்கொள்ளவில்லை.
இதேவேளை இலங்கையில் யாழ்ப்பாணம் , மன்னார் , நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 6600 பேர் வரை கலந்துக்கொண்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். -(3)





