இந்தியாவின் அனுசரணையுடன் அரசாங்கத்துடன் பேச வேண்டும் – மாவை சேனாதிராஜா
தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி பேசுவதாயின் தமிழ் மக்களின் விடுதலையை நேசிக்கும் கட்சிகளையும் ஒன்றிணைக்க வேண்டும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.அதனை தொடர்ந்து சர்வதேச நாடுகளின் குறிப்பாக இந்தியாவின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கத்துடன் பேச வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஏனைய தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து சர்வதேச அனுசரணையுடன் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும் எனவும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரம் கிடைத்த போதும் ஆட்சி அதிகார விடயத்தில் தமிழர்களுடைய உரிமைகள் பறிக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அத்துடன் பேச்சு வார்த்தை மூலம் தமிழர்களின் இனப் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி விடுத்துள்ள அழைப்பை சாதகமாக கையாள வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)




