இந்தியாவின் இணக்கப்பாட்டுடனேயே சம்பூர் கைவிடப்பட்டது : இலங்கை அரசாங்கம்
இந்திய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடனேயே சம்பூர் அனல் மின்நிலையத்தின் நிர்மான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சூழலுக்கு பாதிப்பு என்ற காரணத்தினால் அது தொடர்பாக இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருடன் கலந்துரையாடிதாகவும் இதனை தொடர்ந்து இந்தியாவின் இணக்கப்பாட்டுடன் அதனை நிறுத்த தீர்மானித்துள்ளதாகவும் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்ற அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)




