செய்திகள்

இந்தியாவிலிருந்து கஞ்சா கடத்திய நால்வர் தலைமன்னாரில் கைது

இந்தியாவிலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்திய நான்கு இந்தியப் பிரஜைகள் தலைமன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினருடன் கூட்டாக மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலையைகம் அறிவித்துள்ளது. இவ்வாறாக இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 21, 24, 28 மற்றும் 30 வயதான நால்வரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து 28 கிலோகிராமுக்கும் மேற்பட்ட கேரளா கஞ்சா கைப்பற்ப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகபர்கள் இன்று  மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.