இந்தியாவில் 500 ரூபா , 1000 ரூபா நோட்டுகள் பெறுமதியிழந்தன : இன்று நள்ளிரவு முதல் அமுல்
இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்தியாவில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
இதன்படி டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500 ரூபா மற்றும் 1000ரூபா நோட்டுகளை வதத்திருப்போர் அவற்றை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும். என அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளில் மட்டும் 11ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன்படுத்தலாம். புதிதாக 500 ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்படும். நாளையும் நாளை மறுதினமும் (நவம்பர் 9, 10) ஏ.டி.எம். மையங்கள் செயல்படாது. வங்கிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் கருப்புப் பணத்தை தடுப்பதற்காகவே இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். -(3)




