இந்தியா செல்ல முயன்ற 7 பேர் கைது!
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சித்த 07 பேர் தலைமன்னார் ஏழாம் மணற்திட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
02 பெண்களும் 05 சிறார்களுமே நேற்று(28) மாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படகொன்றில் சென்று ஏழாம் மணற்திட்டு பகுதியில் நின்றுகொண்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
30 வயதான 02 பெண்களும் 13, 10, 08, 06 வயதான 4 சிறுமிகளும் 03 வயதான சிறுவனொருவனுமே கடற்படையினரால் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கிளிநொச்சி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தலைமன்னார் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
-(3)




