செய்திகள்

இந்திய உதவியுடன் முல்லைத்தீவு மீனவர்களுக்கு உபகரணங்களை வழங்க அமைச்சரவையில் தீர்மானம்

இந்திய உதவியின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்களை பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
30 வருடங்களாக நிலவி வந்த யுத்த நிலை காரணமாக முல்லைத்தீவு பிரதேச மீனவ சமூகத்தினரின் மீன்பிடி உபகரணங்கள் இழந்தமை, அதற்கு பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர்கள் மிகவும் கஷ்டத்துக்கு முகங் கொடுத்துள்ளனர். இதனை நிவர்த்தி செய்யவென சிறு அளவிலான அபிவிருத்தி செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 150 மீன்பிடி உபகரண தொகுதிகள், வெளியினை இயந்திரங்கள் மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 100 மில்லியன் வரையாக இருக்கும் குறித்த தொகுதியினை இந்திய அரசின் உதவியாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
n10