செய்திகள்

சட்டப்பேரவையிலிருந்து திமுகவினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றம்!

தி.மு.க.-வினர் அமளியில் ஈடுபட்டதால் சட்டப்பேரவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தி.மு.க எம்.எல்.ஏ.,க்கள் 20 பேர் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட தி.மு.க.-வினர் சட்டப்பேரவையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், வெளியேற்றப்பட்ட தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவைக்குச் செல்லும் பாதையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து, அவைக்காவலர்களால் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.

இரண்டாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ள அவை 3 மணிக்குக் கூடும் என்று அவைத் தலைவர் தனபால் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் வெளியேற்றப்பட்ட போது, அவரது சட்டை கிழிபட்டு இருந்தது. அவர் காவலர்களால் சபைக்குள் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

N5