இந்திய தூதுவரிடம் மனோ தரப்பு கூறியது என்ன?
வடக்கில் கிழக்கிலாவது முதலில் மாகாணசபை தேர்தலை நடத்த சொல்லுங்கள். போலிஸ் அதிகாரத்தை பிரச்சினையாக்கி மாகாணசபையை மறுப்பது நியாயமல்ல என்று மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, இந்திய தூதுவர் கோபால் பாக்லேவை சந்தித்து தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இந்த சந்திப்பு நடந்துள்ளது.
இந்திய தூதரகத்தில் அமைந்துள்ள மலையக கல்வி அறக்கட்டளையை புதுப்பியுங்கள். அதன்மூலம் இந்திய அரசின் முன்னூறு கோடி நன்கொடையை மலையக கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்துங்கள். அந்த நிதி யாருக்காக, எதற்காக வழங்கப்பட்டதோ, அதற்காக பயன்பட வேண்டும் என்றும் இதன்போது இந்திய தூதுவரிடம் அவர்கள் கூறியுள்ளனர்.
-(3)




