செய்திகள்

இந்திய பாதுகாப்பு அமைச்சரை இலங்கை பாதுகாப்பு உயர்மட்டக்குழு சந்திப்பு

இந்திய பாதுகாப்பு அமைச்சர் மற்றும்,  இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ஆகியோரை  இலங்கை  பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

கோவாவில் கடந்த 28ஆம் நாள் ஆரம்பமாகிய Defexpo India 2016 என்ற பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பதற்காக,   பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தலைமையிலான உயர்மட்டக் குழு பனர்ஜி சென்றி்ருந்த போதே இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றன.

பாதுகாப்புக் கண்காட்சியின் பக்க நிகழ்வாக, இந்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், மற்றும் இந்திய பாதுகாப்பு இணை அமைச்சர் ராவ் இந்திரஜித்சிங் ஆகியோரை தனித்தனியாக சி்றிலங்கா குழுவினர் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்பு விவகாரங்கள்  தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்புகளில், இலங்கை பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

n10