செய்திகள்

இந்திய பிரதமரின் அறிவிப்புக்கு தமிழ் தலைமைகள் வரவேற்பு

சட்ட விரோதமான முறையில் அமுல்படுத்தாமல் வைத்திருக்கும் அரசியலமைப்பில் உள்ள 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தவும் மாகாண சபை தேர்தல்களை நடத்தவும் இந்தியா வலியுறுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை அரசாங்கம் இந்தியாவுக்கு வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளமை ஓரளவுக்கு வரவேற்கத்தக்க முன்னேற்றகரமான நகர்வு என தமிழ் தேசிய மக்கள் முன்னையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை 13ஆவது திருத்தத்துடன் தொடர்புபடாத வகையில் இந்திய பிரதமர் மோடி முன்வைத்திருப்பாரேயானால் அது வரவேற்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

-(3)