இந்திய வெளிவிவகார அமைச்சர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை
இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.முன்னதாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர் இலங்கைக்கு வருகை தருவதற்கு முன்னர் நேற்று மாலைதீவுகளுக்கு பயணம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு பயணிக்கும் ஜெய்சங்கர், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயம் தொடர்பில் இந்தியாவின் ஆதரவை வெளிப்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இரண்டு முக்கிய இருதரப்பு உடன்படிக்கைகளிலும் கைச்சாத்திடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.(15)




