செய்திகள்
இந்தோனேசியாவில் கைதாகிய பாதாள குழு தலைவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
அவர்கள் வந்த விமானம் சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
சில மணி நேர தாமதத்திற்குப் பிறகு இன்று (30) பிற்பகல் 3.30 மணியளவில் தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட விமானம், இரவு 7.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.




