செய்திகள்

இந்த வருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பு நடக்கும்?

புதிய அரசியலமைப்புக்காக இந்த வருடத்திற்குள் சர்வஜன வாக்கெடுப்பை நடத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
இது தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிக்களுக்கிடையே கலந்துரையாடல்கள் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மாகாண சபைகளுக்கான தேர்தல் மற்றும் உள்ளுராட்சி தேர்தலுக்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்புக்கான தேர்தல் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புதிய அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் உள்ளிட்ட விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. -(3)