இந்த வருடத்திற்குள் தீர்வு வேண்டும் : சம்பந்தன்
இந்த வருட இறுதிக்குள் வடக்கு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று யாழ்பாணத்தில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிராந்திய அலுவலகத்தை திறந்துவைக்கும் நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை காணமல் போனவர்கள் தொடர்பாகவும் அரசாங்கம் முறையான பதில்களை வழங்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் சுயாதீனத்துவத்திற்கு பாதிப்பு இல்லாதவாறு அதிகாரங்கள் முறையாக பகிரப்பட வேண்டுமெனவும் அதனுடாக தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனவும் இதனை புரிந்துக்கொண்டு அதற்கு ஏற்றால்போன்ற வேலைத்திட்டங்கள் மூலம் மட்டுமே நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.-(3)




