இந்த வருடத்திற்குள் மகிந்த தலைமையில் புதிய அரசாங்கத்தை அமைத்தே தீருவோம் : மகிந்த அணி சபதம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இந்த வருடத்தில் புதிய அரசாங்கத்தை அமைத்தே தீருவோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் நேற்று நுகேகொட நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உறுதிபூண்டுள்ளளனர்.
தற்போதைய ஆட்சிக்காக வாக்களித்த மக்களுக்கே இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மீண்டும் புதிய ஆட்சியை எதிர்ப்பார்ப்பதாகவும் இதன்படி இந்த வருடத்திற்குள் இந்த அரசாங்கத்தை விரட்டியடித்து புதிய அரசாங்கத்தைத ஏற்படுத்துவோம் என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். -(3)




