இனநெருக்கடி தொடர்பான விடயங்கள் குறித்து அல் ஹூசையினுடன் கூட்டமைப்பு விரிவான பேச்சு
இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் இலங்கையில் செயற்படுத்தப்படும் விதம் குறித்து கண்காணிக்கவே தாம் இலங்கை வந்ததாக ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் தெரிவித்தார் என எதிர்கட்சி தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளரை சந்திந்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உண்மையானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வே உண்மையான நல்லிணக்கமாக அமையுமென ஐ.நா ஆணையாளர் செயிட் அல் ஹூசைனுக்கு எடுத்துரைத்ததாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். வடக்கில் விரைவில் மீள்குடியேற்றம் செய்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் அதுகுறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவரவுள்ளதாகவும் ஐ.நா ஆணையாளர் குறிப்பிட்டதாக சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டார்.
இலங்கையின் இனப்பிரச்சினையுடன் தொடர்பட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் மிகநீண்டநேரமாக கலந்துரையாடியதாக எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
R-06




