செய்திகள்

இனப் பிரச்சினைக்கு தீர்வுக்கான பேச்சுவார்த்தை தொடர்பில் கூடும் தமிழ்க் கட்சிகள்!

ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் தமிழ்க் கட்சிகள் கொழும்பில் கூடவுள்ளன.

ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பை நடத்த தீர்மானித்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

10, 11, 12, 13 ஆம் திகதிகளில் ஜனாதிபதி கலந்துரையாடலை நடத்தவுள்ள நிலையில், அதற்கு முன்னர் தமிழ்க் கட்சிகள் கூடி தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

அண்மையில் இது தொடர்பில் நடந்த கலந்துரையாடல் அவசர அவசரமா இடம்பெற்ற நிலையில் அதில் சில கட்சிகள் கலந்துகொள்ளவில்லை என்றும், இதனால் அடுத்த கலந்துரையாடலுக்கு அனைவரையும் அழைக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

-(3)