செய்திகள்

இனவாதத்தை தூண்டி மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த சிலர் முயற்சி : கிரியெல்ல

இனவாத கருத்துக்களை கூறி சிலர் நாட்டில் மீண்டும் யுத்த நிலைமையை ஏற்படுத்த செயற்பட்டுவருவதாக அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பு தொடர்பாக சிலர் இனவாத கருத்துக்களை வெளியிட்டு அதனை குழப்ப முயற்சிப்பதாகவும் ஆனால் அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அதில் இலகுவாக வெற்றி பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கம் என்ற ரீதியில் சகல இனங்களையும் பாதுகாத்து நாம் செயற்படுவோம். எனவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)