இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது – ஆர் ஜே பாலாஜி பேட்டி
ஜல்லிக்கட்டு ஆதரவாக தமிழகமெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளன . இதில் சினிமா உலகத்தை சார்ந்த இயக்குனர் அமீர், ஹிப்ஹாப் ஆதி, ஜிவி பிரகாஷ் போன்ற பல திரைபிரபலங்கள் நேரடியாக போராட்ட களத்தில் குதித்து தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று ஆர் ஜே பாலாஜி மெரினா கடற்கரையில் நடந்து வரும் போராட்டத்தில் கலந்து கொண்டு அவரது கருத்துக்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்த போராட்டத்தில் பஸ் கண்ணாடி உடைக்கல, யாரும் குடிச்சிட்டு கலாட்டா செய்யல, இங்கு இருக்கிற எல்லாரும் தெளிவா இருக்காங்க.
இந்த ஒற்றுமை போராட்டம் ஜல்லிக்கட்டுடன் நின்றுவிடக்கூடாது, நாளை விவாசாய மக்களுக்காகவும், காலேஜ் கட்டணம் அதிகம் வசூலித்தாலும் இந்த மாதிரியான போராட்டங்கள் நடக்கும். இனிமேல் எங்களை ஏமாற்ற முடியாது என்பதை தெரிவித்துள்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
N5




