செய்திகள்

இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும்

இன்னொரு மின்சாரத் தடை ஏற்படுமானால்,  பல உயர் அதிகாரிகள் வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்று   பிரதமர்   எச்சரித்துள்ளார்.

இலங்கையில்  ஏற்பட்ட மின்சாரத் தடைகளுக்கு மின்சார சபை உயர் அதிகாரிகளின் சதியே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையிலேயே   பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அதேவேளை மின்சாரத் தடைக்கான காரணங்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த விசாரணைகளில், மின்சாரத் தடைக்கு சதித் திட்டங்களே காரணம் என்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்கள் பலரும் எச்சரித்துள்ளனர்.

 n10