செய்திகள்

இன்று வானில் தோன்றவுள்ள பெரிய சந்திரன் : சீரற்ற வானிலையால் இலங்கையருக்கு பார்க்கும் வாய்ப்பு குறைவு

பௌர்ணமி தினங்களில் வழமைப்போல் தெரியும் சந்திரனை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்தில் தோன்றும் பெரிய சந்திரனை இன்று திங்கட்கிழமை வானில் காணலாம்.
‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படும் இது பூமிக்கு மிக அருகில் நிலவு காட்சியளிப்பதாகும். இதன் போது நிலவு மிகவும் பிரகாசமாகவும், மிகப்பெரியதாகவும் தோற்றமளிக்கும்.
இவ்வாறான நிகழ்வு 68 வருடங்களுக்கு முன்னர் 1948 இல் நிகழ்ந்துள்ளதாக இலங்கை கோள் மண்டலம் தெரிவித்துள்ளது
எவ்வாறாயினும் இலங்கையில் தற்போது பல மாவட்டங்களில் சீரற்ற வானிலை காணப்படுவதால் இலங்கையருக்கு அதனை பார்க்கும் சந்தர்ப்பம் குறைவாகவே இருப்பதாக வானிலை அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோமீட்டர் தொலைவில் சந்திரன் சுற்றி வருகிறது, சந்திரன் பூமியை சுற்றிவரும் போது குறிப்பிட்ட நீள்வட்டப்பாதையில் செல்லாமல் அதில் இருந்து விலகி சில நேரங்களில் பூமிக்கு அதன் தொலைவில் இருந்து 48,000 கிலோமீட்டர் அருகில் செல்லும். போதே இது போன்று பெரிய சந்திரன் தெரியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. -(3)