இன்று வெளியாகிறது ஜெ-வுக்கு அளித்த சிகிச்சை விவரங்கள்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பி வந்த தமிழக அரசியல் கட்சிகள், ஜெயலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரங்களை வெளியிட தமிழக அரசும், அப்போலோ நிர்வாகமும் மவுனம் காக்க காரணம் என்ன என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புக்கொண்டே இருந்தன.
இந்நிலையில் சென்னையில் தனியார் ஹோட்டல் ஒன்றில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவும், அப்போலோ மருத்துவமனையில் அதன் தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டியும் இன்று மதியம் தனித்தனியே பத்திரிகையாளர்களை சந்தித்து ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த விபரங்களை வெளியிட இருக்கிறார்கள்.
குறிப்பாக ஜெயலலிதா உயிரிழந்த டிசம்பர் 5-ம் தேதி மதியம், ‘இப்போதுள்ள நிலை மிகமிக மோசம்தான். ஆனால், இதுவரைக்கும் எங்களால் செய்ய முடிந்த எல்லா சிகிச்சைகளையும் கொடுத்துவிட்டோம். மேலும், ஜெயலலிதாவுக்கு இப்போது Extracorporeal life support எனும் சிகிச்சைக் கொடுக்கப்படுகிறது. இதுதான் இருப்பதிலேயே நவீன சிகிச்சை. ஆனால் இப்போது நிலைமை கைமீறி சென்றுவிட்டது’ என லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலே அளித்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
அதன் பின்னர் இதுவரை தமிழக அரசாலும், அப்போலோ நிர்வாகத்தாலும் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை விபரம் பற்றி எந்த விளக்கமும் வெளியிடப்படவில்லை. அதனால் டாக்டர் பிரதாப் ரெட்டி மற்றும் ரிச்சர்ட் பீலே இருவரின் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.
n10




