இரட்டைவேடத்தில் விக்ரமின் ‘இருமுகன்’
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் உள்ளிட்ட பலர் நடிக்கும் திரைப்படமே ‘இருமுகன்’. இந்தப்படத்திற்கான இரண்டுகட்ட படப்பிடிப்புக்கள் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது.
சென்னை, காஷ்மீர், தாய்லாந்து என்று மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு பல இடங்களில் நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான அனைத்து இடங்களையும் இயக்குனர் ஆனந்த் ஷங்கர், ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குனர் சுரேஷ் செல்வராஜ் ஆகிய மூன்று பேரும் நேரில் சென்று தேர்வு செய்துள்ளதாகவும் திரைப்படவட்டாரம் தெரிவிக்கின்றது.
இதற்கிடையில்ளூ கார்த்தி நடிக்கும் ‘காஷ்மோரா’ படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருக்கும் நயன்தாரா, சென்னையில் நடைபெற இருக்கும் ‘இருமுகன்’ படப்பிடிப்பிடிப்பில் 21ஆம் திகதி கலந்து கொள்ள உள்ளாராம்.
படத்தின் கதை தொடர்பில் ஏதும் சேதி கசிகிறதா என்று பார்த்ததில், விக்ரம் இரட்டை வேடத்தில் தோன்றவுள்ளார் என்று தெரியவருகின்றது. படத்திற்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடலாசிரியர் கார்க்கி, நடனம் பிருந்தா மாஸ்டர் என் தமிழ் சினிமாவின் புகழ்பெற்றவர்கள் பலரது சங்கமத்தில் வரப்போகிறான் இருமுகன்.
N5




