செய்திகள்

இரண்டாவது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார் அன்டி முரே

மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது முதலாவது விம்பிள்டன் டெனிஸ் பட்டத்தை வென்ற இங்கிலாந்தின் அன்டி முரே இன்று லண்டனில் நடைபெற்ற போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை தோற்கடித்து இரண்டாவது முறையாகவும் பட்டத்தை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

6-4 7-6 (7-3) 7-6 (7-2) என்ற செட் கணக்கில் மிலோஸ் ரயோனிக்கை தோற்கடித்து இங்கிலாந்து மக்களையும் தனது குடும்பத்தவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

1935 இல் பிரெட் பெர்ரி என்ற பிரித்தானிய வீரர் ஆடவர் போட்டியில் இரண்டாவது முறை வெற்றி பெற்று 77 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் ஆடவர் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் விம்பிள்டன் டென்னிஸ் பட்டத்தை வெல்வது இதுவே முதல் தடவையாகும்.

29 வயதுடைய அன்டி முரே தனது நீண்ட நாள் காதலியான சோர்ஸ்ஸை ஆகஸ்ட் 2015ல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சோபியா ஒலிவியா என்ற 6 மாதம் நிரம்பிய பெண்குழந்தை உள்ளது.

பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் தனது மனைவி கேட்டுடன் இந்த போட்டியை நேரடியாக பார்த்து ரசித்ததுடன், போட்டி முடிவடைந்த பின்னர் முரேயிடம் சென்று வாழ்த்து தெரிவித்தார்.

முரேயின் குழந்தை 6 மாதங்கள் மட்டுமே என்பதை கருத்தில் கொண்டு, நித்திரை கொள்ளாமல் எப்படி உங்களால் வெற்றி பெற முடிந்ததோ தெரியவில்லை என்று வில்லியம் முரேயை பார்த்து கேட்டதுடன், எப்படி உங்கள் மகள்? குடும்பம் எப்படி என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த முரே, அவள் நலமாக இருக்கிறாள். உண்மையில் அவள் நன்றாக நித்திரை கொள்கிறாள். முதல் மூன்று மாதங்கள் தான் கஷ்டமாக இருந்தது. கடந்த முன்று நாட்களும் அவர் நன்றாக நித்திரை கொன்றாள் என்று கூறினார்.

Kim-Sears10JAN_Duke-and-Duchess-of-Cambridge

Andy-Murray-v-Milos-Raonic-Wimbledon-Mens-Final (1) Andy-Murray-v-Milos-Raonic-Wimbledon-Mens-Final (2) Andy-Murray-v-Milos-Raonic-Wimbledon-Mens-Final Benedict-Cumberbatch-and-David-Cameron Duke-and-Duchess-of-Cambridge