செய்திகள்

இரண்டு இடங்களில் இதொகாவின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

உள்ளூராட்சி தேர்தலுக்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் பதுளை மாவட்டத்தில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் இரு சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹாலிஎல மற்றும் ஹப்புத்தளை ஆகிய பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தில் 141 அரசியல் கட்சிகளும், 21 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளன.

இவற்றில் 11 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-(3)