செய்திகள்
இரண்டு சிறுவர்களை சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்குமாறு நீதிமன்றம் உத்தர
கிளிநொச்சி திருவையாறு பகுதியில் திருட்டச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக பொலிசாரால் கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களையும் வவுனியாவில் அமைந்துள்ள அகிலாண்டேஸ்வரி சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி திருவையாறு மற்றும் சாந்தபுரம் ஆகிய பகுதிகளில் திருட்டுச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் (12-02-2016) இரண்டு சிறுவர்களை கிளிநொச்சி பொலிசார் கைது செய்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் குறித்த இரண்டு சிறுவர்களையும் நேற்றைய தினம் (13-02-2016) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து குறித்த இரண்டு சிறுவர்களையும் வவுனியாவில் உள்ள அகிலாண்டேஸ்வரி சிறுவர் காப்பகத்தில் எதிர்வரும் 26ம் திகதி வரை தங்க வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
n10




