செய்திகள்

இரத்தினபுரியில் 15 வயது சிறுவன் சடலமாக மீட்பு

இரத்தினப்புரி கல்இன்ன மாரப்பன பகுதியில் 15 வயது சிறுவனொருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.
இன்று காலை இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன் இதன்போது அந்த சிறுவனின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும் இதன்படி இது  கொலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாரப்பன வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்விக் கற்கும் அஞ்சன கவிந்து என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
n10