செய்திகள்
இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதி விபத்தில் 11 பேர் காயம்
இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதான வீதியின் கஹவத்தை – திக்பிடிகல வித்தியாலயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பஸ் மற்றும் லொரி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த 11 பேரே காயமடைந்துள்ளதோடு அவர்கள் சிகிச்சைகளுக்காக இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
n10




