செய்திகள்
இரவு முதல் எரிபொருள் விலைகள் குறைப்பு!
இன்று இரவு 9 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்புக்கமைய 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 40 ரூபாவினாலும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளது.
இந்த விலை குறைப்புக்கமைய 92 ஒக்டேன் ரக பெட்ரோல் லீட்டர் ஒன்று 370 ரூபாவுக்கும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 415 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.
-(3)




