இராஜதந்திரிகளின் வருகையும் கூட்டமைப்பின் சந்திப்பும்
-நரேன்-
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் வெளிநாட்டு இராஜதந்திரிகளின் வருகை அதிகரித்துள்ளது. மஹிந்த ஆட்சிக்காலத்தில் அரசாங்கம் ஐ.நாவுக்கும்இ சர்வதேச சமூகத்திற்கும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமையால் சர்வதேச அழுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அதன் ஒரு பகுதியாக மஹிந்த அரசாங்கம் சர்வதேச ரீதியில் அழுத்தங்களை எதிர்நோக்கி இந்த நாட்டில் ஆட்சி மாற்றம் கூட ஏற்பட்டிருந்தது. எதிரும்இ புதிருமாக இருந்த இரண்டு கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்கும் நிலையும் உருவாகியது. மக்கள் புரட்சிகளின் ஊடாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சீனாஇ ரஷ்யாஇ கியூபா போன்ற நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணிவந்த சிறிலங்கா சுதந்திர கட்சியும்இ அமெரிக்கா உள்ளிட்ட மேற்குல நாடுகளுடன் எப்போதுமே நல்லுறவை பேணி வருகின்ற அல்லது அவர்களது தாஸர்களாக் செயற்பட்டு வருகின்ற ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து தற்போதைய அரசை அமைத்துள்ளனர். இதன் மூலம் இலங்கைக்கு எதிரிகளே இல்லை என்ற நிலை தோன்றியுள்ளது. இதனை ஜனாதிபதியும்இ பிரதமரும் அடிக்கடி கூறியும் வருகிறார்கள்.
கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் இலங்கையை பாரிய அசௌகரியங்களுக்கு உட்படுத்தியிருந்தது. அதே நேரத்தில் யுத்ததில் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும்இ பலகோடி ரூபா சொத்துக்களையும் இழந்தும்இ அதற்கு மேலும் நூற்றுக்கணக்கானோர் சிறையில் வாடி வந்த நிலையிலும்இ ஆயிரக்கணக்கானோருக்கு என்ன நடந்தது என்று அறியாத நிலையிலும் சர்வதேச அழுத்தம் காரணமாக தமக்கு நீதியும்இ நியாயமும்இ நிவாரணமும் கிடைக்கும் என்று தமிழ் மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் இந்த நிலை முற்றிலும் தலைகிழாக மாறியது. முன்னர் பயந்து கொண்டிருந்த அரசாங்கம் தற்போது போரில் மட்டுமன்றி இராஜதந்திர ரீதியதாகவும் வெற்றி பெற்று விட்டதாக இரட்டை வெற்றியை சத்தம் இன்றி கொண்டாடிவருகிறது. மறுமுனையில்இ முன்னர் ஓரளவு என்றாலும் நம்பிக்கை கொண்டிருந்த தமிழ் சமூகம் தற்போது அந்த நம்பிக்கையில் இடி விழுந்தது போல் உணர்கின்றனர்.
இந்த நிலையில் தான் 2015 மார்ச்சில் இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமை சபையில் நடைபெற வேண்டிய விவாதம் ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த உடனடியாகவே மேற்குலக நாடுகளினால் ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு 2015 செப்டெம்பர் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த அமர்வில் புதிய அரசாங்கம் ஆட்சிப் பெறுப்பேற்று குறைந்த நாட்களே ஆகியிருந்தமையால் மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததுடன்இ முன்னர் இருந்த கடுமையான நிலைப்பாடுகள் நீக்கப்பட்டு இலங்கை அரசாங்கமும் இணை அணுசரணை வழங்கக் கூடிய வகையில் சர்வதேச சட்ட வல்லுனர்களை உள்ளடக்கிய ஒரு விசாரணை பொறிமுறையை வகுத்து அதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து இந்த வருடம் யூன் மாதத்தில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டிருந்தது. அதுவும் தற்போது முடிவடைந்துள்ளது. இந்த நிலையிலேயே 5 வது முறையாக அமெரிக்கா உதவி இராஜாங்க செயலாளர் நிஸா பிஸ்வால் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளனவாஇ அதன் தற்போதைய நிலை என்ன என்பது தொடர்பாக அறிந்து கொள்வதற்கும்இ பிராந்திய பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும் பிஸ்வாலின் வருகை அமைந்துள்ளது. இதன் மூலம் பிராந்தியத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கையை கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாற்றி தனது வல்லாதிக்கத்தை நிலைநிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா நகர முனைவதாக தெரிகிறது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு சார்பாக செயற்படும் ஜப்பானின் இராஜதந்திரியும்இ அமெரிக்காவுக்கு எதிர்நிலைப்பாட்டை கொண்டிருக்கும் சீனாவின் வெளிவிவகார அமைச்சரும் இந்த நாட்டிற்கு வந்து சென்றுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
இலங்கையின் உண்மையான நண்பன் சீனாவே என்றும் அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு என அனைத்து விடயங்களிலும் இலங்கையுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றது என்றும் அதன் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்கா உதவி இராஜாங்க செயலாளர் பிரதமருடனான சந்திப்பின் போது ‘ சிறிலங்காவுடனான இருதரப்பு பொருளாதார வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கு ஊக்கமளிக்க அமெரிக்கா வலுவான ஆதரவு அளிக்கும்’ எனவும் தெரிவித்துள்ளார். அதேவேளைஇ தமிழ் தேசியக் கூட்மைப்பை புதன்கிழமை அமெரிக்கா தூதரகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான பொறிமுறைக்கு அரசாங்கம் இறுதி வடிவம் கொடுக்கும் போது இது பற்றி தாம் உரிய அழுத்தம் கொடுப்பதாக உதவி இராஜாங்க செயலாளர் கூறியுள்ளார். கூட்டமைப்பினுடைய நிலைப்பாடும் இதை ஒட்டியதாகவே பொறிமுறை உருவாக்கப்படும் வரை காத்திருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களால் வழங்கப்பட்ட வாக்குப் பலமும்இ பின்னால் நிற்கும் மக்கள் பலமுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேரம் பேசும் சக்தியாக உள்ளது. இலங்கை அரசாங்கத்தையோ அல்லது சர்வதேச சமூகத்தையோ தமிழ் மக்களின் அபிலாசைகள் குறித்து கவனம் செலுத்த தக்க வகையில் அழுத்தம் கொடுப்பதற்கு இந்த பேரம் பேசும் சக்தி இருந்த போதிலும் கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை காத்திரமாக செயற்பட்டதாக தெரியவில்லை. சர்வதேச அழுத்தம் காரணமாகவும்இ உள்நாட்டு அரசியல் நிலமைகள் காரணமாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவருக்கு எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்து கிட்டியது. இதனால் சர்வதேச இராஜதந்திரிகளை மரபு ரீதியாக சந்திக்க கூடிய வாய்ப்பும் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் அது சரியாக பயன்படுத்தப்படுகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.
ஏனெனில்இ இயல்பாகவே கூடி விவாதித்து முடிவு எடுத்து அதனை இராஜதந்திரிகளுடன் விவாதிப்பதில் நாட்டமின்றி இருக்கும் தலைவருக்கு அதற்கான தேவையை இது இல்லாமல் செய்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பிஸ்வாலுடனான சந்திப்பில் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்ட போதும் என்ன என்ன விடயங்கள் பேசப்போகின்றோம் என்று முன்கூட்டியே கலந்துரையாடியதாக தெரியவில்லை. மறுமுனையில்இ கடந்த முறை அமெரிக்கா உதவி இராஜாங்க செயலாளர் வருகை தந்த போது வடக்கு முதலமைச்சர் அவரிடம் வடக்கின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக மனு ஒன்றினை வழங்கியிருந்தார். ஆனால் இந்த சந்திப்பின் போது வடக்கு முதலமைச்சர் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒரு சம்பிரதாய பூர்வமான சந்திப்பாக நிகழ்ந்திருப்பதை அறிய முடிகிறது.
N5




