செய்திகள்

இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு நாளை!

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் புதிய இராஜாங்க அமைச்சர்கள் நாளை (08) பதவிப்பிரமாணம் செய்யவுள்ளனர்.

குறித்த பதவிப் பிரமாணம் நாளை காலை நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இதன்போது 30க்கும் மேற்பட்ட புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பிக்கள் இதன்போது பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-(3)