இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுவிப்பது எப்போது : காலப்பகுதியை அறிவிக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் இராணுவத்திற்கு கோரிக்கை
வடக்கில் பாதுகாப்பு படையினர் வசமுள்ள எஞ்சியுள்ள தனியார் காணிகளை விடுவிப்பது எப்போது என்பது தொடர்பாக காலப்பகுதியொன்றை தெரிவிக்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் இராணுவத்திடம் கேட்டிருப்பதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதேவேளை அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள சுதந்திரத்தின் 70 ஆவது ஆண்டு நிறைவுக்கு முன்னர் இனப்பிரச்சினைகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். என கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். -(3)




