செய்திகள்
இராணுவத்தில் 7,499 பேருக்கு பதவி உயர்வுகள்
இராணுவத்தின் 372 அதிகாரிகளும், 7,127 இதர நிலை அதிகாரிகளுக்கும் அடுத்த தரத்திற்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இராணுவத் தளபதியின் சிபாரிசுக்கு அமைய ஜனாதிபதியினால் இவர்களுக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் 73ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
இலங்கை இராணுவத்தின் 73ஆவது ஆண்டு விழா கொண்டாட்டங்கள், இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே தலைமையில் பனாகொட இராணுவ முகாமில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
-(3)




