இராணுவ சூழ்ச்சி நடக்காது : நடக்காது எனவும் கூற முடியாது
அரசாங்கத்திற்கு எதிராக இராணுவ சூழ்ச்சியொன்று ஏற்படாது என்ற நம்பிக்கை இருந்தாலும் அவ்வாறு ஏற்படாது என்ற எண்ணத்தில் செயற்பட முடியாது எனவும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட கருத்தில் இராணுவத்தினரை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வது தொடர்பாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பாக நேற்று கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது இராணுவ சூழ்ச்சியேதும் ஏற்படுமென்ற அச்சம் ஜனாதிபதிக்கும் ,அரசாங்கத்திற்கும் இருக்கின்றதா? என ஊடகவியலாளரினால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ்வாறு நடக்காது , என்றாலும் அவ்வாறு நடக்காது என்ற எண்ணத்தில் செயற்பட முடியாது. முன்னாள் பாதுகாப்பு செயலாளர் , மகிந்தவுக்கு பிரசார செயற்பாடுகளில் ஈடுபட்ட முன்னாள் இராணுவ தளபதிகள் உள்ளிட்டோர் இந்த நாட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்கள் இராணுவத்தினரிடையே அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வேறு அர்தத்தில் கொண்டு செல்லாம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




