செய்திகள்
இறுதிடெஸ்டில் அதிவேக சதமடித்தார் மக்கலம்
தனது இறுதிடெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருக்கும் நியுசிலாந்து அணி தலைவர்பிரென்டன் மக்கலம் 54 பந்துகளில் சதமடித்து டெஸ்ட் போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதமடித்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.அவுஸ்திரேலியாவிற்கு எதிராக இன்று கிறைஸ்சேர்சில் ஆரம்பமாகியுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே அவர் இந்த சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.




