இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக இன்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி
இறுதி யுத்தத்தின் போது, மக்களை பட்டினியில் இருந்து காப்பதற்காக, சில தன்னார்வ அமைப்புகள், தங்களிடம் இருந்த அரிசியினை பங்கிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியாக காய்ச்சி வழங்கின.இதனை நினைவுப்படுத்தும் வகையில் வருடாந்தம் குறித்த காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூரும் முகமாக இன்று திருகோணமலை சிவன் கோவிலுக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாரப்பட்டது.கடந்த 9 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கஞ்சி காய்ச்சி வழங்கப்படுகிறது.(15)




