செய்திகள்

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கவில்லை

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து மேற்கொள்ள வேண்டிய விசாரணை நடவடிக்கைகளில் எந்தவொரு விடயத்தையும் இலங்கை அரசாங்கத்திடம் வற்புறுத்தவில்லை என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்  செய்யித் அல் ஹுஸைன், சர்வதேச நீதிபதிகளை விசாரணை நடவடிக்கையில் இணைத்துக் கொள்வது சம்பந்தமாகவும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

ரொய்ட்டர் செய்தி சேவையுடன் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

எனினும் இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடைமுறையும் பக்கச்சார்பற்ற முறையில் சுயாதீனமானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அந்த நடவடிக்கைள் அனைத்தும் மிகவும் விரிவான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

n10