செய்திகள்
இலங்கைக்கு சர்வதேச அழுத்தங்கள் காணப்படுகிறது : நீதி அமைச்சர்
இலங்கையில் சட்ட திருத்தங்களை ஏற்படுத்துவது தொடர்பாக சர்வதேச அழுத்தங்கள் காணப்படுவதாக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் பொருளாதார லாபத்திற்காக இலங்கையின் இறைமையை வெளிநாடுகளுக்கு காட்டிக்கொடுத்து செயற்பட மாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வலஸ்முல்ல பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




